காரமடை நகர திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கே.ஜி. குருபிரசாத் – திமுக சார்பு அணியினரின் உற்சாக வாழ்த்து. - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 8 December 2025

காரமடை நகர திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கே.ஜி. குருபிரசாத் – திமுக சார்பு அணியினரின் உற்சாக வாழ்த்து.


காரமடை – டிசம்பர் 08:

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள காரமடை நகர திமுக பொறுப்பாளராக திமுக தலைமை கழகத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட கே.ஜி. குருபிரசாத் அவர்களுக்கு, காரமடை நகர திமுக சார்பு அணியினர் சார்பில் உற்சாகமான வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு காரமடை நகர திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.ஆர். பத்ரி தலைமையேற்றார். நிகழ்வில் 17வது வார்டு அவைத் தலைவர் முத்துசாமி, துணை செயலாளர் திருமதி சீலா சசிகுமார், பிரதிநிதி திருமதி பிரேமா சரவணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மு. சுபாஷ், பரத், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் ஆர். அருள்குமார், தே. குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நா. பூபதி, திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் வி.ஆர். ராம்கி, சூரிய பிரகாஷ், மாணவரணி துணை அமைப்பாளர் கவின், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், 17வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில், சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பட்டிக்காரம் பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு திமுக தலைமை கழகத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கே.ஜி. குருபிரசாத்,

“கட்சியின் நம்பிக்கைக்கு உரிய வகையில் காரமடை நகர வளர்ச்சிக்கும், திமுக வின் இலக்குகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்”

என உறுதியளித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad